
மேற்கு வங்கத்தை சேர்ந்த தியா மண்டோல் (20) என்ற பெண் பெங்களூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர் அங்குள்ள கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தியா வழக்கம் போல கல்லூரி முடித்துவிட்டு விடுதிக்கு சென்று உள்ளார். அப்போது விடுதிரையில் தனியாக இருந்த அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவி கடந்த ஒரு வாரமாக மனமடைந்து காணப்பட்டதும் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.