திமுக கட்சியின் அரக்கோணம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச் சாயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் திருமண மோசடி புகார் கொடுத்திருந்ததார். இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யாததாக கூறி அவர் அதிமுக எம்எல்ஏவை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அந்தப் பெண் தன்னை 20 பேருக்கு இறையாக்க நினைத்ததாக தெய்வச் சாயல் மீது பரபரப்பு புகாரினை கொடுத்த நிலையில் இன்று அந்தப் பெண் நான் தைரியமாக புகார் கொடுத்ததற்கு தற்போது என்னை கோழையாகி விட்டார்கள் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக பொறுப்பிலிருந்து தெய்வச் சாயலை நீக்கியுள்ளார்.

அதற்கு பதிலாக கவியரசு என்பவர் அப்பணிக்கு நியமிக்கப்படுவதாகவும் அவருடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாளை எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் அரக்கோணத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.