பள்ளிகளின் மாணவர் கள்  பொதுவாக சீருடை யில் தான் வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. கல்லூரிகளுக்கு சென்ற பிறகு அவர்கள் விருப்பமான ஆடையை அணிந்து கொள்ளலாம். இந்த நிலையில் சில கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் அதன்படி நடப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர்களின் ஆடை காரணமாக கல்லூரி முதல்வரும் மேற்கொண்ட நடவடிக்கை அதிக  புகார்களை  பெறப்பட்டது.

இதனால் கல்லூரிகளில் சீருடை அணிவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்த புகாரின் காரணமாக உயர் கல்வித்துறை மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு வசதியான மற்றும் கண்ணியமான ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. உயர் கல்வித் துறையின் ஆடை குறித்து அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.