சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க அந்த நாட்டு அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் குழந்தை பெறுவதை அதிகரிக்கும் விதமாக அந்த நாட்டு அரசு திருமண விதிகளை இலகுவாக்கியுள்ளது.

அதன்படி புதிதாக திருமணமானவர்கள் தங்களின் திருமணத்தை உள்ளூரிலேயே இனி பதிவு செய்து கொள்ளும் வகையில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை பதிவு செய்ய சொந்த ஊருக்கு செல்வதால் ஏற்படும் செலவுகள் குறையும் என கூறப்பட்டுள்ளது.