மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் வசித்து வருகிறார். இவர் மாந்திரீகம் உள்ளிட்ட பல விஷயங்களில் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில் இவரது மனைவியின் சகோதரருக்கு திருமணம் ஆகாமல் இருந்துள்ளது.

இதன் காரணமாக தன் மனைவியிடம் உன் சகோதரருக்கு திருமணம் ஆக மாந்திரீக பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக தன் மனைவியையும் மாமியாரையும் நிர்வாணமாக பூஜை செய்ய வேண்டும் என அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். அவர்கள் இருவரும் அவரின் பேச்சைக் கேட்டு நிர்வாணமாக பல பூஜைகளை செய்த நிலையில் அதனை அவர் போட்டோ எடுத்து உறவினர்கள் சிலருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளான அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த அந்த பெண்ணின் கணவனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.