தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்திற்கு திருமணம் செய்வதற்காக நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த முடிவு செய்த ஆனந்த் பணத்திற்கு என்ன செய்வது என யோசித்தார்.

இதனால் கொம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்து 52.50 லட்சம் ரூபாய் பணத்தை திருடி விட்டு ஆனந்த் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தை கைது செய்து 43 லட்ச ரூபாய் பணத்தை மீட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.