கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி விடுவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போதைய 400 கோடி சேர்த்து மொத்தம் 1,451 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வங்கி மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்ட வரும் நிலையில் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் வகையில் கூடுதலாக 400 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.