
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள நிலையில் இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பு முறை குறித்த வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தின் ஆரம்பத்திலேயே விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் மின் கட்டண ரசீது மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும்.
முதலில் விண்ணப்பத்தில் பயனாளியின் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண், வசிக்கும் வீடு, வீட்டின் மின் இணைப்பு எண், வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், தொழில், வயது, மாத வருமானம்,வருமான வரி செலுத்தும் விவரங்கள். இதன் பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளதா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரிடமாவது கார், ஜீப் , டிராக்டர் போன்ற கனரக வாகனங்கள் உள்ளதா என்பது போன்ற விவரங்களை குறிப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.