
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மே 28ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை மூன்றாம் தேதி தொடங்கும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.