மதுரை மாவட்டத்திலுள்ள வளையங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்துள்ளார். அப்போது ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஒரு தனியார் கிளினிக்கிற்கு சென்று திடீரென ஆய்வு செய்துள்ளார்.

அப்போது டாக்டராக இருந்தவரிடம் படிப்பு, டாக்டருக்கான சான்றிதழ் குறித்து விசாரித்தார். அந்த விசாரணையில் கிளினிக் நடத்தியது போலி டாக்டரான அழகர்சாமி என்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து போலி டாக்டர் அழகர்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.