அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் டைரக்டில் தயாராகும் திரைப்படம் “மிரியம்மா”. இப்படத்தில் மூத்த நடிகையான ரேகா நாயகியாக நடிக்க, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரெஹைனா இசையமைக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி தயாராகும் இப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பாக இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, மிரியம்மா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ரேகா கர்ப்பிணியாக இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.