கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. இதனிடையே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

ஆளுங்கட்சியான பா.ஜ.க 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தல் நிலவரம் தொடர்பாக டெல்லியில் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்துகிறார்.