உயிரினங்களில் மிகப்பெரியதாக கருதப்படுவது நீல திமிங்கலம் தான். இது ஆழமான கடற்பகுதியில் தான் வாழும். இந்நிலையில் சிலி நாட்டின் தீவு ஒன்றில் நீலத் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  பிரம்மாண்டமாக காட்சி தந்த அந்த நீல திமிங்கிலத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதால் ஏதேனும் கப்பல் மோதி திமிங்கலம் கரைக்கு வந்ததா? அல்லது பருவநிலை மாற்றத்தினால் கரை ஒதுங்கியதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் எப்படி இந்த நீல திமிங்கலம் கரைக்கு வந்தது என்பது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.