
சமூக ஊடகங்களில் இயங்கும் சுதந்திரமான கண்டன்ட் உருவாக்குவோர் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவும், OTT மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகக் குறியீட்டிற்கு இணங்கவும், வெளியீட்டை தணிக்கை செய்து சான்றளிக்கும் முன் அவர்களின் கண்டன்டை சரிபார்க்க ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அரசு புதிய ஒளிபரப்புச் சேவைகள் மசோதாவை கொண்டுவந்தது.
இந்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியிட்டது. இதுகுறித்த கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கூறிய நிலையில், பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதாவது இந்த மசோதா கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு இந்த மசோதாவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கலந்தாலோசித்து புதிய மசோதாவை தயாரித்து விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.