சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ளது. 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனை விழாவாக கொண்டாடாமல் நிகழ்ச்சியாக நடத்த உள்ளதாக கூறி தோழமை மற்றும் எதிர்க்கட்சிகளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள், கலைஞர் உலகம் என்ற பெயரில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியமான சட்டங்களின் அரசாணைகள் வைக்கப்பட்டுள்ளது, வியட்நாம் மார்பில் கொண்டு அமைக்கப்பட்ட சுவரில் அவரின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. 7d தொழில்நுட்பத்துடன் சிறிய திரையரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.