பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு  கருங்கல் பாறை கற்கள் ஏற்றுக் கொண்டு நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென சேற்றில் சிக்கியது. இந்நிலையில் லாரியில் இருந்து டிரைவர் உடனடியாக கீழே இறங்கியுள்ளார். அவர் இறங்கிய சிறிது நேரத்தில் அந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த கற்கள் அனைத்தும் கீழே கொட்டியது. இதனையடுத்து நேற்று காலை 11 மணிக்கு பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை இரண்டு கிரேன்கள் மூலமாக மீட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணம் – திருவையாறு சாலையில் சாலையில் ஒரு மணி நேரம் நேற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.