தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சேதம் அடைந்த மின் கம்பிகள், மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் இதர சேதமடைந்த மின் சாதனங்கள் குறித்து மின்னகத்திற்கு 94987-94987 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.