ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் இந்தப் போரில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து அழித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதோடு, அந்த வழியாக வரும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இந்த நீரிணை மிக முக்கியப் பங்கு வகிப்பதால், இதன் முடக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பைப் பாதித்துள்ளது. ஈரான் மேற்கொண்டு வரும் இந்த கடுமையான கண்காணிப்பு மற்றும் முற்றுகை போன்ற சூழலால் உலக நாடுகள் இரண்டு பிரிவாகப் பிளவுபட்டுள்ளன.

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் ஈரான் எடுத்து வரும் இந்த அதிரடி முடிவுகள், சர்வதேச சந்தையில் பெரும் பொருளாதார மாற்றங்களை உருவாக்கி வருகின்றன.