கன்னி ராசி அன்பர்களே,

இன்று அனைவரிடமும் ஆர்வமாக பேசுவீர்கள். செய்யும் பணிகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.  தொழில் வியாபார நடைமுறை சீராகும். பணவரவை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். பொருட்களை இரவல் கொடுக்கல் வாங்கல் வேண்டாம்.

இன்று எதிர்பார்க்கும் லாபத்தை பெற கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். தொழிலாளர்கள் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். மதிநுட்பத்தால் வெற்றி பெற முடியும். இன்று பெண்கள் அவசரமாக சில பணிகளை செய்ய வேண்டியது இருக்கும். பிள்ளைகள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்று மாணவர்கள் எதிலும் குழப்பம் கொள்ள வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். அவசரம் வேண்டாம். சக மாணவர்களிடம் பேசும் போது கவனமாக இருங்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்