ஹைதராபாத்: காதலாகத் திருமணம் செய்து 4 ஆண்டுகளாக வாழ்ந்த நிகிதா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரமான அனுபவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் வருமானத்தில் வாங்கிய வீட்டுக்கான கடனை தவறாமல் செலுத்தி வந்த நிலையில், கர்ப்பமாகி பெற்றோரிடம் சென்றிருந்தபோது, வீட்டை கணவர் தனது மனைவியின் ஒப்புதலின்றி வேறொருவரிடம் விற்றுவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிகிதா மற்றும் ஸ்ரவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தின் போது நிகிதாவின் பெற்றோர் ரூ.48 லட்சம் வழங்கியுள்ளனர். இந்த தொகையிலும், வங்கிக் கடனிலும் சேர்த்து, தம்பதிகள் ஒரு வீடு வாங்கியுள்ளனர். அந்த வீட்டு கடனுக்கான தவணையை நிகிதா ஒருவராகவே செலுத்தி வந்துள்ளார். எல்லாம் நன்றாக நடந்து வந்த நிலையில், நிகிதா கர்ப்பமாகி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
தாய்மையை முடித்து குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிய நிகிதா, அந்த வீட்டில் வேறொருவர் வசிக்கிறார்கள் என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது, தனது கணவர் ஸ்ரவன் அந்த வீட்டை விற்றுவிட்டதை அறிந்தார். ஆனால் வீடு வாங்கும் பொழுது வங்கிக் கடன் நிகிதா பெயரில் இருந்தது மட்டுமின்றி, வீடு விற்கும் ஆவணங்களிலும் அவர் கையொப்பமிடவில்லை. இதனை வைத்து, அவரை ஏமாற்றியதாக நிகிதா புகார் அளித்துள்ளார்.
வீடு விற்கப்பட்ட முறையை எதிர்த்து, குகட்பல்லி போலீசில் நிகிதா புகார் அளித்துள்ளார். அவரது கணவர் ஸ்ரவன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், எந்த முகவரியும் தராமல் ஒளிந்து வாழ்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிகிதாவின் நிலைமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
పుట్టింటికి కాన్పుకు వెళ్లి వచ్చేవరకు ఇల్లు అమ్మేసిన భర్త
కూకట్ పల్లి శాంతి నగర్ లో నివాసం ఉంటున్న నికితా శ్రావణ్ దంపతులు
డెలివరీ కోసం వెళ్ళి 11 నెలలుగా తల్లిగారి ఇంటివద్ద ఉంటున్న నికితా
ఐటీ కంపెనీలో ఉద్యోగం చేస్తున్న నికితా
ప్రతి నెల ఇంటి ఈఏంఐ కోసం భర్తకి డబ్బులు పంపుతున్న… pic.twitter.com/ZRVDuzmF8b
— TNews Telugu (@TNewsTelugu) July 18, 2025
