கேரள மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று 8 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 8 மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தாலும் தேர்வுகள் ஏதேனும் முன்கூட்டியே திட்டமிட்டு இருந்தால் அது வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.