தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.