தென் மாவட்டங்களை போல காலநிலை மாற்றத்தால் பெய்யும் அதி கனமழையால் அடுத்த ஆபத்து கோவைக்கு தான் வரும் என விஞ்ஞானி பாலசுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியால் உருவாகும் ஈரக்காற்று, மேற்கு தொடர்ச்சியின் உயரமான மலைமுகடுகளில் முட்டி மீண்டும் அரபிக் கடலுக்கே திரும்பி விடும். அப்போது கோவையில் தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.