
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சம்பவ நாளில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வட மாநில வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை அடுத்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சதீஷ், 17 வயது சிறுவன், லிக்கிட் மற்றும் விஜயகுமார் என்பது தெரியவந்தது.