வெங்காயம் வெட்டும்போது கண் எரிச்சலைத் தவிர்க்க ஒரு இளைஞர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறும் முறை மிக எளிமையானது. முதலில், வெங்காயத்தின் தலைப்பகுதியை வெட்டாமல், அதை இரண்டாக நறுக்க வேண்டும். தலைப்பகுதியில் “ஹை கான்சன்ட்ரேட் சிங் ப்ரொபஷனல் ஆக்ஸைடு” என்ற வாயு அதிகம் இருப்பதால், அதை முதலில் வெட்டினால் கண் எரிச்சல் ஏற்படும் என்று அவர் விளக்குகிறார். எனவே, வெங்காயத்தை பாதியாக வெட்டுவது முதல் படியாகும்.
பிறகு, வெங்காயத்தின் தோலை உரித்து, உங்களுக்கு தேவையான அளவுக்கு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளலாம். ஆனால், தலைப்பகுதியை கடைசி வரை வெட்டாமல் வைத்திருக்க வேண்டும். இறுதியாக, அந்த தலைப்பகுதியை தூக்கி எறிந்துவிடலாம். இந்த முறையில் வெங்காயம் வெட்டுவதால், கண்ணில் எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று அந்த இளைஞர் கூறுகிறார். இந்த எளிய முறை பலராலும் பகிரப்பட்டு, சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.
