மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் கண்ணுக்கு மருந்து போடும்படி நாராயணசாமி கூறியுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சயடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் நாராயண சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.