
சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்பா என்பவருது கதையை மையமாக வைத்து இயக்குனர் முகேஷ் குமார் சிங் கண்ணப்பா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கண்ணப்பா திரைப்படத்தில் சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மது, ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், பிரீத்தி முகுந்தன் என பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி படத்தில் பிரபாஸ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.