உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயன்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கணினிகளுக்கான பிரத்யேக whatsapp செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை வாட்ஸ் அப் சேவையை வெப் வாட்ஸ் அப் மூலம் மட்டுமே பெற முடியும் வகையில் இருந்தது. தற்போது இந்த புதிய செயலியை கணினியின் விண்டோஸ் தளத்தில் நிறுவி குரூப் வீடியோ காலில் 8 பேர் வரையும், குரூப் ஆடியோ காலில் 32 பேர் வரையும் உரையாட கூடிய வகையில் வசதிகள் அதில் கொண்டுவரப்பட்டுள்ளது.