ட்விட்டரில் தற்போது திரை நட்சத்திரங்கள்,கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் என பலரும் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ப்ளூ டிக் வசதி பயன்படுத்துகின்றனர். இந்த ப்ளூ டிக்வசதியை தற்போது கட்டணம் செலுத்தி தான் பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு ட்விட்டர் ப்ளூ டிக் சரிபார்ப்பு ப்ரீமீயமாக மாற்றப்பட்டது. தற்போது பயணங்களில் ப்ளூ டிக் சரி பார்ப்பு நீக்கம் செய்யப்படுவதாகவும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ப்ளூ டிக் வேண்டுமானால் சந்தா பிரீமியம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனி நபர்கள் ட்விட்டர் ப்ளூவில் பதிவு செய்யலாம் மற்றும் நிறுவனங்கள் சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களில் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.