விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரக்ஷிதா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் விவாகரத்து பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கணவரிடம் பிரிந்து அம்மாவுடன் வசித்து வரும் ரக்ஷிதா சமீபத்தில் தனது கணவர் மீது ஆபாச வார்த்தைகள் பேசியதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது மார்பு பகுதியில் டாட்டூ பற்றிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் அந்த இடத்தில் இது தேவையா என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.