
குடும்பத் தலைவிகளுடைய வேலையை கணவரது எட்டு மணி நேர வேலையோடு ஒப்பிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. வெளிநாட்டில் வேலை செய்து கணவன் வாங்கிய சொத்துகளில் தன்னுடைய மனைவிக்கு உரிமை கிடையாது என்று கணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி இந்த வழக்கில் அவர் தெரிவித்த கருத்து என்னவென்றால், குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலை செய்வது, குடும்ப நிர்வாகம் என்று குடும்ப தலைவிகள் 24 மணி நேரமும் வேலை செய்து வருகிறார்கள். கணவன் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.