டிஓடி (Time of Day Tariff) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6-10, மாலை 6-10 போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க இந்த முறை வழிவகை செய்யும்.   இதன்படி, 20 சதவிகிதம் வரை மின் கட்டணம் குறைக்கப்படும். பகல் மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கட்டணம் மாற்றயமைக்கப்படும்.

வணிக மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு முதலில் இந்த கொள்கை ஏப்ரல் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. மற்ற பயனர்களுக்கு, இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் வைத்திருக்கும் நபர்களுக்கு, இந்த மீட்டர்கள் நிறுவப்பட்டவுடன் புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில், மின் கட்டணம் குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமில்லை என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஸ்மார்ட் மீட்டர் அவசியம், தமிழகத்தில் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தும் பணி தற்போது தான் தொடங்கியுள்ளதால் இத்திட்டம் அமலாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது