உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் சுரேஷ் என்பவரின் மனைவி மால்தி, கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமடைந்து, கங்கை ஆற்றில் குதித்தார். ஆனால் ஆற்றில் குதித்த பிறகு, தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு கரையை நோக்கி நீந்தினார். அப்போது, அங்கு ஒரு பெரிய முதலையைப் பார்த்து பயந்து, அருகிலிருந்த மரத்தில் ஏறி முழு இரவையும் மரத்தில் கழித்தார்.
சனிக்கிழமை இரவு, டீ தயாரிக்கச் சொன்னதால் தொடங்கிய சண்டை பெரிதாகி, மால்தி வீட்டைவிட்டு வெளியேறி ஜஜ்மாவு கங்கை பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார். மறுநாள் காலை, ஆற்றங்கரையில் சென்ற கிராமவாசிகள் மரத்தில் இருந்த மால்தியின் உதவி குரலை கேட்டு அதிர்ந்தனர். அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க ஜஜ்மாவு காவல் நிலையப் பொறுப்பாளர் வினய் யாதவ் மற்றும் குழுவினர், மால்தியை பாதுகாப்பாக இறக்கி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
