இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்காக, அனைத்து அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான நாதன் எல்லிஸ் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் விலகியிருப்பது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அவருக்குப் பதிலாக எந்த வீரர் அணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
