கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் அண்டை நாடான பாகிஸ்தான், இந்தச் சூழ்நிலையிலும் தனது ராணுவ பட்ஜெட்டைப் பெருமளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்படும் கடன் மற்றும் நிதி உதவியைக் கொண்டு, பாதுகாப்புத் துறைக்காக கூடுதலாக 1000 கோடி ரூபாயைச் செலவிட பாகிஸ்தான் அரசு தயாராகி வருகிறது.

மேலும் நாட்டின் சாமானிய மக்கள் அத்தியாவசியத் தேவைகள், கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் வறுமையால் தவித்து வரும் வேளையில், பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கான இந்த முடிவு உலகளாவிய நிதி வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடுமையான நிதிப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும், பாகிஸ்தான் தனது ராணுவ முன்னுரிமைகளுக்கு மக்களின் நலனை விட அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இந்நடவடிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

இருப்பினும், கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையில் கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானின் இந்த கூடுதல் செலவு மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, எச்சரிக்கின்றனர்.