பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த நாட்டின் தற்போதைய மோசமான சூழலைக் கண்டு, அங்கிருக்கும் மக்களே தங்கள் நாட்டை ஏளனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் “இந்தக் காட்சிகளைப் பார்த்தால் வெளிநாட்டினர்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்பிவிடுவார்கள்” என்று சொல்லும் அளவிற்கு, மிக மோசமான நிலையில் அந்த நாடு சிதைந்து போயுள்ளதாக இந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by popartbutt143💛👀 (@popartbutt143)

“>

இந்த வைரல் வீடியோவில், பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சீர்குலைவை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அடிப்படைத் தேவைகளுக்காகக்கூட மக்கள் திண்டாடும் அவலம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இதனால் சொந்த நாட்டு மக்களே தங்கள் தேசத்தின் அவலநிலையை கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போயிருப்பது அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தையும், சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.