தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை 2.30 மணிக்கு சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு குழந்தை இறந்து பிறந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சந்தியாவின் உடல்நிலை மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சந்தியா உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் சந்தியாவும் குழந்தையும் இறந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.