கத்தார் நாட்டில் ராணுவப் பணி ஒன்றிற்காக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம்போல் கிளம்பிச் சென்றது. அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென கடல் வழியாக அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், அது கடலுக்குள் விழுந்து மூழ்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்திற்கு முதற்காரணமாக இருக்கக்கூடும் என்று தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் மாயமான மற்றொரு நபரைத் தேடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கடற்படை மற்றும் மீட்பு குழுவினர் அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
