மத்திய ரிசர்வ் வங்கியானது அனைத்து விதிமுறைகளையும் அவ்வப்போதும் மாற்றம் செய்து வருகிறது. அந்த  வகையில் வங்கிகளில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வித மாக புதிய விதிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வீட்டு கடன் வாங்கிய ஆவணங்களை கடனை அடைத்த பிறகு வங்கிகள் முறையாக கொடுப்பதில்லை என்றும், கடனை அடைத்த பிறகு சொத்து ஆவணங்களுக்காக மாத கணக்கில் அலைய வேண்டியிருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கடனை அடைத்த அடுத்த 30 நாட்களுக்குள் சொத்து ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்படி தவறினால் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையானது  வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு  நிவாரணமாக வழங்கும். மேலும் இந்த புதிய விதிமுறை டிசம்பர் 1 முதல்அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.