இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை அதிகரித்த நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொரு விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை கடந்த 2020 மே மாதம் முதல் 2023 மார்ச் 1 வரை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் 2020இல் ரூ.569.50 ஆக சிலிண்டர் விலை கடந்த ஆண்டு மே மாதத்தில், ரூ.1,015.50 ஆகவும், ஜூலையில் ரூ.1068 ஆகவும் உயர்ந்தது. இதனை தொடர்ந்து, 2023 மார்ச்சில் ரூ.1118.50 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி 3 ஆண்டுகளில் மட்டும் இரு மடங்காக ரூ.548 உயர்ந்துள்ளது.