மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மேகாலயாவில் 85%, நாகாலாந்தில் 84% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 55 இடங்களுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் பாஜகவிற்கு காங்., டப் பைட் கொடுத்து வருகிறது. தற்போது வரை பாஜக 8 இடங்களிலும், காங்., 8 இடங்களிலும் சமமாக முன்னிலை பெற்று வருகின்றன. அதேசமயம் என்.பி.பி. 16 இடங்களிலும், மற்றவை 23 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதே நிலை நீடித்தால், அங்கு தொடங்கு சட்டசபை வர வாய்ப்புள்ளது.