சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஏர்டெல் நிறுவனத்தலைவர் சுனில் பார்த் மெட்டல் பேசியபோது, இந்த வருடத்தில் இணைய சேவை மற்றும் போன் கால் விலையை உயர்த்த இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில் மேலும் விலையை உயர்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார். நிறுவனத்திற்கு வரும் லாபம் குறைந்திருப்பதால் ரீசார்ஜ் விலை உயர்த்த வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மக்கள் 30 ஜிபி டேட்டா வரை விலை இல்லாமல் உபயோகித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய குறைந்த பட்ச ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.99 பிளானை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் குறைந்தபட்சமாக ஒரு ரீசார்ஜ் க்கு ரூ.200 வரை லாபம் வருகின்ற நிலையில் தற்போது அதனை 300 வரை மாற்ற இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேப்போல் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் உதவியுடன் தொலைதொடர்பு  நிறுவனங்களில் கட்டமைப்புகளை அரசு உயர்த்தி வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 5ஜி  சேவைகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நாடு முழுவதும் 5ஜி  சேவையை வழங்க தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இன்னும் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் 2ஜி சேவை உபயோகித்து வருவதாகவும் அதனால் 2ஜி சேவையை நிறுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க இருப்பதாகவும் வரும் தகவல்கள் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.