கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த சாரா ரிஜி என்ற ஆறு வயது சிறுமி 10 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மைதானம் ஒன்றில் சிறுமி மட்டுமே தனியாக அமர்ந்திருப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடு்த்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமியின் சகோதரன் கூறிய அடையாளங்களின்படி கடத்தல்காரர்களில் ஒருவரது ஸ்கெட்ச் வரையப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.