பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க கவுண்டரில் காத்து கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்நிலையில்  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நம்முடைய நாட்டில் பல வசதிகள் படிப்படியாக தொழில்நுட்ப அம்சங்களை பின்பற்றி வருகிறது.

குறிப்பாக மெட்ரோ ரயில் டிக்கெட் qr குறியீடு மூலம் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டது. அதேபோல இந்திய ரயில்வேயிலும் வழங்க தயாராகியுள்ளது. எனவே இனி ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது கிடையாது. சில நிமிடங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த வசதி வாடிக்கையாளர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.