இந்தியாவில் சமீபகாலமாகவே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சமீப காலமாகவே பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை  கருதத்தில் கொண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் கோச்சிங் வகுப்புகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அங்குள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி முடிந்து மாலை நேரத்தில் மாணவிகள் அதிக அளவில் கோச்சிங் வகுப்புகளுக்கு சென்று கல்வி பயின்று வருகிறார்கள் . எனவே அவர்களை சீக்கிரம் வகுப்புகளை முடித்து வீட்டுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.