வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் யாத்ரி சேவா அனுபந்த் என்ற பெயரில்  தெற்கு ரயில்வே புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இது பைலட் திட்டமாக செயல்படுத்தப்படும் நிலையில், பயணிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இதுவரை 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை பெங்களூரு, சென்னை, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில்,  மக்களுக்கு சிறப்பான முறையில் வந்தே பாரத்ரயில் சேவையை  கொடுக்கும் விதமாக யாத்திரி சேவா அனுபந்த் என்ற திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது. இது சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் யாத்திரி சேவா அனுபந்த் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.