கடகம் ராசி அன்பர்களே, 

இன்று சிக்கல்கள் ஓரளவு தீர்ந்து நிம்மதி ஏற்படும். முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அரிய சாதனைகளை புரிந்து மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வங்கள் சேரும். இந்த நாள் இனிய நாளாக அமையும். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியம் சாதகமாக முடியும். உபரி பணம் வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் இன்று காரியங்களை மிகவும் அற்புதமாக செய்ய முடியும். எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்கும் சூழல் உள்ளது.

இன்று மாணவர்கள் தைரியமாக எதிலும் ஈடுபடுவீர்கள். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும். நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வீர்கள். நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்