பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாராட்டி வருகின்றனர். இந்த படத்திற்கு எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் நடிகர் கிச்சா சுதீப் டூரிஸ்ட் பேமிலி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, சமீபத்தில் மிக அருமையாக எழுதி கச்சிதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. கதை சொன்ன விதம் என்னை இருக்கையை விட்டு எழுந்திருக்கவே விடவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி இடம் இருந்தது. அனைவரும் நன்றாக நடித்திருந்தனர் மற்றும் நடிகர்களின் தேர்வு அற்புதம். படத்தின் இசை மற்றொரு பெரும் சொத்து என பாராட்டியுள்ளார்.