தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியை முழுமையாக அதிமுக கைப்பற்றியது. கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணி கோவையில் பெற்ற வாக்குகளை விட தற்போது அதிகமாக பெற்றுள்ளோம். இருப்பினும் அதிமுக கடந்த தேர்தல்களிலும் கோவையில் தோல்வியை சந்தித்துள்ளது. அண்ணாமலை தான் பாஜக கூட்டணியில் இருக்கும் போது அதிகமாக பேசினார். அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி பிரிய காரணம் அண்ணாமலை மட்டும் தான். மேலும் விமர்சனங்களை விட்டுவிட்டு பாஜக ஆட்சியில் கோவைக்கு நல்ல திட்டங்களை அண்ணாமலை கொண்டு வரட்டும் என்று கூறினார்..