மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், திருநங்கைகளுக்கு ஓய்வுதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்குவதில் கடைசி பத்து மாநிலங்களில் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. வயது மற்றும் வகை போன்ற காரணி அடிப்படையில் மாநிலத்தின் பங்கு 200 முதல் 400 வரை மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் முறையே ரூ.2,750  மற்றும் 3000 வரை வழங்கப்படுகிறது. ஆனால் ஒடிசாவில் 500 முதல் 700 வரை தான் வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் உள்ள தரவுகளின் படி தெரிய வந்துள்ளது. ஒடிசா மாநில அரசு என்எஸ்ஏபியில் இருந்து வெளியேறியவர்களுக்கு தன்னுடைய சொந்த ஓய்வூதிய திட்டம் மது பாபு பென்ஷன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தியிருந்தாலும் இதன் கீழ் வழங்கப்படும் தொகையானது என்பது வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்கு 500 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 700 மட்டுமே கொடுத்து வருகிறது.